Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   793-என்னகத்தில் உனையழைத்தேன்  
என்னகத்தில் உனையழைத்தேன் - என்னில்
எரிகின்ற சுடராவாய் - என்னை
நிதம் ஆட்கொள்ள
வந்திடுவாய் என் இறைவா (2)

என் உயிராய் உன்னை நான் உணர்ந்தேன்
என்னை ஏற்றிட எழுந்தருள்வாய்
என் பழி பாவம் நீக்கி - என்னை
உன்னில் இணைத்திட வா - 2

இருள் சூழும் என் இதயம் - உன்
அருளினில் திளைத்திட வா
உன் வழி நாளும் வாழ்ந்திடவே - இன்று
என்னில் எழுந்திடுவாய் - 2


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்