Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   791-என் வீட்டின் விருந்துக்கு  


என் வீட்டின் விருந்துக்கு உனையழைக்கின்றேன்
ஏற்பாயா எழுவாயா
என் நண்பனே.. என் அன்பனே

எனை வாங்கிப் பகிர்ந்துண்ணுங்கள் - நான்
வாழ்வான வான்விருந்து.
பாவம் நீக்கி உனை தினம் காக்கும்
மீட்பின் திருவிருந்து..
புவிக்காகவும்.. உனக்காகவும்
அருந்தப்படும் - நினைவாகச் செய்யுங்கள் - என்
நினைவாகச் செய்யுங்கள்


எனை வாங்கித் தினம் பருகுங்கள் - நான்
அழியாத வாழ்வமுது
தாகம் தணித்து உனை தினம் தேற்றும்
சமத்துவ அருமருந்து
புவிக்காகவும்.. உனக்காகவும்
சிந்தப்படும் - நினைவாகச் செய்யுங்கள் - என்
நினைவாகச் செய்யுங்கள்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்