791-என் யேசு வருகையிலே |
என் யேசு வருகையிலே என் வாழ்வில் புது வசந்தம் என் உள்ளம் அமைதி பெறும் புதுமணம் பெற புதுப்பொலிவுடன் அகமகிழ்ந்திடுதே அன்பான என் இதயம் உன்னோடு ஒன்றானதே சரணாக உனில் வாழ விரைந்தேகினேன் நீயின்றி நானில்லையே நீயின்றி நானில்லையே நீயில்லா வேளையிலே தனிமைதான் என் வாழ்விலே அன்போடு அணைக்கின்ற கரமல்லவா நினையாது வாழ்வாகுமா நினையாது வாழ்வாகுமா காணாத கண்கள் இல்லை நினையாத காலமில்லை உனக்காக ஒரு பாடல் நான் பாடவா இன்பம் நான் கொள்ளவா இன்பம் நான் கொள்ளவா |