789-என் தேவனே என் இறைவனே |
என் தேவனே என் இறைவனே என் இனிய நேசனே என் அன்பனே என் நண்பனே இதயம் வாருமே வா வா விரைந்து வா என்னில் வா எழுந்து வா தண்ணீர் கண்ட மானைப் போல் தாவி நானும் வருகின்றேன் ஆன்ம தாகம் தீரவே அள்ளிப் பருக விளைகின்றேன் (வா....வா....) தாயைக் கண்ட சேயைப் போல் தவழ்ந்து உன்னிடம் வருகின்றேன் ஒளியைக் கண்ட மலரைப் போல் என்னுள்ள மலரும் மலருதே (வா....வா....) வழிமேல் விழியை வைத்தேன் உன் வரவை நோக்கி பார்க்கின்றேன் உம்மில் என்றும் வாழவே உமது அருளைப் பொழிகவே (வா....வா....) |