757-என் தேடல் நீ |
என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே உனை மனம் தேடுதே நீ வழி காட்டுமே ஆ. ஆ (2) என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே உனை மனம் தேடுதே நீ வழி காட்டுமே இறைவா இறைவா வருவாய் இங்கே இதயம் அருகில் அமர்வாய் இன்றே ஒரு கோடி விண் மீன்கள் தினம் தோன்றினும் நீயின்றி என்வாழ்வு இருள் சூழ்ந்திடும் பிறரன்பை என்பணியில் நான் ஏற்கையில் உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும் இறைவார்த்தையில் நிலையாகுவேன் மறை வாழ்விலே நிலையாகுவேன் வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே --இறைவா இறைவா. உன்னோடு நான் காணும் உறவானது உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும் பலியான உனை நானும தினம்; ஏற்கையில் எளியேனில் உன் வாழ்வு ஓளியாகிடும் உன் மீட்டலால் எனில் மாற்றங்கள் உன் தேடலால் எனில் ஆற்றல்கள்; வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -- இறைவா இறைவா.. |