Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   785-என் தெய்வமே என் ஜீவ ஒளியே  
என் தெய்வமே என் ஜீவ ஒளியே
நீர் எந்தன் வழியாக வா
நானுந்தன் வழிதன்னில் வழுவாமல் வழிசெல்ல
வருந்தும் என் வளமாக வா ஆ... - 2 (2)

தேவா உன் தேகம் நான் உண்ண வந்தேன்
தீராதவினை தீரவே - எந்தன்
தேவா நீ எனில் வாருமே (2)
பாவங்கள் கோடி பறந்தோடி போகும் - 2
பார்போற்றும் தேவன் என் உளம் தேடி வரவே - 2

குளிர்கால நேரம் குயில் பாடும் கானம்
குழலோடு உனைத் தேடினேன் - எந்தன்
குறை தீர்க்க எனில் வாருமே (2)
என் நோய்கள் இன்று எனை அகன்று போகும் - 2
என் தேவன் இன்று என் உளம் தேடி வரவே - 2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்