Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   784-என் தெய்வமே இயேசு தெய்வமே  

என் தெய்வமே இயேசு தெய்வமே
உன் பாதமே மலர் சூடுவேன்

என்னிறையே என்னெழிலே வா - உன்
சொந்தமாக என்னை மாற்ற வா
பூவிளையும் தேனமுதே வா - உன்
புன்னகையால் என்னைத் தேற்ற வா
என்னுயிரே என்னருகே வா
என்னுயிரில் கலந்திடவே வா

உலகமெல்லாம் ஒளி பெறவே வா - என்
உள்ளமெல்லாம் கொள்ளை கொள்ள வா
தென்றலிலே மகிழ்ந்து தவழ்ந்து வா - உன்
தேனிசையால் என்னை ஈர்க்க வா
தென் பொதிகை சந்தனமே வா
தேன் மதுரத் தீந்தமிழே வா


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்