Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   783-என் உணவாக என் உயிராக  
என் உணவாக என் உயிராக
இறைவா நீ வருவாய்
உன் இல்லமாக நான் உருவாக
இயேசுவே வரமருள்வாய்
என்னுள்ளே உவந்தே எழுந்தருள்வாய் (2)

எருசலேம் ஆலயம் நீ சென்ற போது
என்னென்ன கோபம் கொண்டாய்
என்னுள்ளே நீ இன்று வருகின்ற போதோ
என் நிலை பார்த்திருப்பாய் - இயேசுவே
என் குற்றம் பொறுத்துக்கொள்வாய்
கனிவோடு ஒரு வார்த்தை சொல்லிட வேண்டும்
பனிபோல என் ஆன்மா மாறும் அந்நேரம்
மனவாயில் திறந்து வைத்தேன் - இயேசுவே
மகிழ்வோடு எழுந்தருள்வாய்

இன்று உன் வீட்டில் நான் தங்கிட வேண்டும்
என்று நீ சொல்லிடுவாய்
உனை விருந்தோம்பி உன் வார்த்தை கேட்டு
உன்னடி விழித்திருப்பேன் - இயேசுவே
என்னுள்ளம் களித்திருப்பேன்
இன்றிந்த வீட்டுக்கு ஈடேற்றம் என்று
இன்புற்று நீ சொல்லி எனை வாழ்த்த வேண்டும்
இதையே கேட்கின்றேன் - இயேசுவே
உனை எதிர்பார்க்கின்றேன்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்