Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   782-என் இல்லத்தில்  

என் இல்லத்தில் கேட்கிற எவரும் பெறுகிறார்
தேடுகிறவர் கண்டடைகிறார்
தட்டுவோர் எவருக்கும் திறக்கப்படும்
என்கிறார் இயேசு ஆண்டவர்

தான் பெற்ற குழந்தைக்கு அன்பை
மறுக்கின்ற தாயெங்கும் உண்டோ - 2
தயக்கம் எதுவும் வேண்டாம்
நம்பிக்கை ஒன்றே போதும்
கேட்பதைக் கொடுப்பவரன்றோ - 2

ஒரு அடி எடுத்தால் போதும்
ஓடி வந்தணைக்கும் தெய்வம் - 2
பாவத்தை எண்ணவே மாட்டார்
பாசத்தை நிறைவாய் பொழிவார்
அவர்தான் மாறாத அன்பு - 2

எவருக்கும் திறக்கும் இதயம்
எப்போதம் பெறலாம் அபயம் - 2
அருகினில் வந்தால் போதும்
அன்பின் கதவுகள் திறக்கும்
பேதமே அவரில் இல்லை 2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்