743- |
என் இயேசுவே என்னுள்ளம் வா என் மன்னவா என்னில்லம் வா ஏங்கித் தவிக்கும் ஏக்கம் தணிக்க - 2 இதயத் தலைவா எழுந்து வா வா... வா... என்னிறைவா... வா... வா... என்னிறைவா... திருக்கோயில் எனதுள்ளம் அதில் வாழ வா திருப்பள்ளி எழுந்தென்னை ஆட்கொள்ள வா திருவுள்ளம் இன்றென்னில் நிறைவேற்ற வா திருவாழ்வாய் என் வாழ்வை நீ மாற்ற வா திருநாளில் மலராக எனை ஏற்க வா ஒரு மேகத் தூணாகி வழிகாட்ட வா ஒரு ஜீவப் புனலாகி உயிரூட்ட வா ஒரு சொல்லால் புயல் நீக்கி கரையேற்ற வா ஒரு பார்வை எனைப் பார்த்து மருள் நீக்க வா ஒரு நாளும் பிhயாமல் என்னில் வாழ வா துளி நேரம் எனதுள்ளம் துயில் கொள்ள வா வழி மூடும் பொழுதெல்லாம் வழி சொல்ல வா துணையாக உனதன்பின் கதை சொல்ல வா இருள் மேவுமென் வாழ்வில் ஒளியேற்ற வா இகமெல்லாம் உன் வாழ்வைப் பரிசாக்க வா |