Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   776-என் இதய தெய்வமே  


என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா
உன் உறவை எண்ணியே உள்ளம் ஏங்குதே
உயிரே எழுந்து வா - 2

அணைத்துக் காக்கும் தாயின் அன்பும்
ஒருநாள் அழியலாம்
அறவழியில் நடத்தும் தந்தை
அன்பும் அழியலாம் - ஆனால்
யேசுவே உன் அன்பிற்கழிவுண்டோ - 2
என் இனிய அன்பே எழுந்து வா - 2

வஞ்சம் கூறும் நண்பர் கூட்டம்
இங்கு பல உண்டு
தன்னலமே உருவெடுத்து உலவும் நட்புண்டு - 2
ஆனால் யேசுவே நல் நண்பன் நீரன்றோ - 2
என் இனிய நண்பா எழுந்து வா 2

பொய்மை மலிந்து மெய்மை மெலியும்
நிலையைக் காண்கிறேன்
தீமை நிறைந்த உலகில் இன்று அழிந்து மடிகின்றேன் - 2
எந்தன் தெய்வமே உன் அன்பால் ஆள வா - 2
உன் உள்ளம் நிறைந்து வாழ வா - 2

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்