Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   773-எழுவீர் இறைவா ஏழையின்  
எழுவீர் இறைவா ஏழையின் உள்ளமே
எழிலே வாழ்வில் தருவீர் வளமே

பாலை நிலத்தில் பசித்த முன்னோர்
புசிக்கும் உணவாய் அளித்தீர் மன்னா
பாரில் வாடும் மாந்தர் நாடும்
பரம உணவே வா

வாழ்வும் வழியும் நீரே என்றீர்
வானோர் அமுதம் எமக்கு ஈந்தீர்
பாறை பிளந்தே பானம் அளித்த
சீவிய சுனையே வா

பேழையில் உறைந்த ஏழையின் விருந்தே
வேளையில் உதவும் தெய்வீக மருந்தே
பனிமலை உருக்கும் பகலவன் போல
பாவத்தைப் போக்கிட வா


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்