Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   771-எந்தன் உயிரே நீ தான்  


எந்தன் உயிரே நீ தான் இயேசுவே
உன்னை மட்டும் சுவாசிப்பேன் (2)
நான் உன்னை மறந்தாலும்
நீ என்னை மறவாமல் (2)
என் மீது பாசம் கொண்டாய்
என் நெஞ்சில் வாசம் செய்தாய் (2)

கல்வாரி நினைவுகள்தான்
என் வாழ்வில் நனவாகுமே
உன்னோடு ஒன்றாகினால்
என் வாழ்வு நலமாகுமே (2)
உணவாய் எழுந்து எனில் வந்து - என்
உணர்வாய்க் கலந்து உயிர் சுமந்தாய்..
மெழுகாய் உருகி ஒளிர்ந்திடவே
உனது ஆற்றல் வேண்டுமே

எந்தன் உயிரே நீ தான் இயேசுவே
உன்னை மட்டும் சுவாசிப்பேன் (2)

என் வாழ்வின் தேடல்களில்...
வழியாகி ஒளியாக வா
என் வாழ்வின் சோகங்களில்
தாயாகித் தாலாட்ட வா....
உறவாய் என்னை நீ அழைத்தாய் - என்
உறவுகள் இங்கு உயிர் பெறுமே....
சிலுவைகள் தோளில் நான் சுமக்க
உனது சிறகுகள் வேண்டுமே


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்