Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   769-எத்தனை காலம் உனக்காக  
எத்தனை காலம் உனக்காக நான்
ஏங்கித்தவிப்பேன் இறைவா - 2 வா இறைவா

வேறென்ன வேண்டும் விண் விருந்திருக்க
விளக்கென்ன வேண்டும் கதிரவனிருக்க
உறவென்ன வேண்டும் அருள் மொழியிருக்க - 2
உலகென்ன வேண்டும் உள்ளொளியிருக்க - 2

கடலினைக் கேட்டால் கருணையைச் சொல்லும்
உடலினைக் கேட்டால் உள்ளத்தைச் சொல்லும்
சுடர்தனைக் கேட்டால் சுயவரஞ் சொல்லும் - 2
படர் நிலவென்னும் படைத்தவன் கண்ணே - 2

முதலொன்றுமில்லை மேலவன் தவிர
முடிவொன்றுமில்லை அவன் செயல் தவிர
மழலையும் முதுமையும் அவனது விளக்கம் - 2
மறைவிலும் தொடர்வது அவனது தொடக்கம் - 2


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்