Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   768-உனக்காக நான் வாழத்  


உனக்காக நான் வாழத் துடிக்கின்றேன்
என்னுள்ளம் வரவேண்டும் இசைவேந்தனே
இதயம் மீட்கும் இசைராகமே
நான் பாடும் புதுராகமே

கடல் கீதங்கள் உனைப் பாடினால் - உன்
கவியாக நான் மாறுவேன்
இளந்தென்றல் காற்று இசையாகினால் - என்
இதழோரம் சுதி மீட்டுவேன்
அருள் தீபம் எனில் ஏற்ற உளம் வாருமே
வரமீந்து எனைக் காத்து வழிகாட்டுமே
படைப்போடு நான் சேர்ந்து உனைப் போற்றுவேன்

பனி தூவும் இளங்காலை சிறுபூவினில் - ஒரு
இதழாக நான் மாறுவேன்
நதியோரம் தலை சாய்க்கும் சிறு நாணலாய் - உன்
விழியோரம் அருள் தேடுவேன்
பயிர் வாழ உரமாகும் நிலமாகவே
உயிர் வாழ உணவாக எனில் வாருமே
புது வாழ்வு நான் காண ஒளியாகுமே







 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்