Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   767-உன்னோடு நான் விருந்துண்ண  
உன்னோடு நான் விருந்துண்ண வேண்டும்
உன் வீட்டில் நான் குடிகொள்ள வேண்டும்
உன் அன்பில் நான் உறவாட வேண்டும் -(2) - உன்னோடு

என் வாழ்விலே இது ஓரு பொன்னாள்
என் அகமதிலே நீ வரும் திருநாள் - (2)
உன் அன்புக்காய் அனைத்தையும் இழப்பேன் - (2)
மன்னவன் உனக்காய் என்னையே கொடுப்பேன்

பொருட்செல்வமே என் கடவுளென்று
ஏழையின் பொருளை எனக்கெனப் பறித்தேன் -(2)
மனம் மாறினேன் மகிழ்வடைந்தேன் நான் - (2)
பன்மடங்காக ஏழைக்குக் கொடுப்பேன்

என் பாவத்தை மன்னிக்க வருவாய்
என் உளமதிலே அமைதியைத் தருவாய் -(2)
என் இதயத்திலே வாழ்ந்திட வருவாய் - (2)
என் வீட்டிற்கு மீட்பினைத் தருவாய்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்