Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   766-உன்னை நினைத்து நான்  


உன்னை நினைத்து நான் பாடும் பாடல்
என் வாழ்வில் சங்கீதமே
உன்னோடு நான் கொள்ளும் நிலையான பந்தம்
என் வாழ்வில் ஆனந்தமே (2)
இறைவா வா என்னில் வா - 2
உன்னோடு நான் என்றும் உறவாட வா

உயிரின் உறவே உறவின் உயிரே
என்னோடு நீ பேச வா
உலகின் நிறைவே உண்மைச் சுடரே
என் வாழ்வில் வழிகாட்ட வா
அன்பே அமுதே ஆருயிரே
அருகில் இருந்து வழிகாட்டும் (2)

வானின் அமுதே வாழ்வின் கொடையே
என்னோடு நீ வாழவா
வானின் நிலவே வாழ்வின் சுடரே
என் உள்ள குறைபோக்க வா
அன்பே அமுதே ஆருயிரே
அருகில் இருந்து வழிகாட்டும் (2)


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்