Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   765-உன்னைக் கண்டு உறவாட  


உன்னைக் கண்டு உறவாடஉன்னை உண்டு உயிர் வாழ
ஏங்குகிறேன் இயேசுவே - என்னைத்
தாங்கிட வா நேசமே (2)
அழைத்தேன் இறைவா இதயம் வருவாய் - 2

மாறாத பேரன்பு உன் கருணை - அது
மலரச் செய்யும் என்னில் உன் திறனை (2)
வாராது வந்த அன்பே இயேசய்யா - உன்னைச்
சேராது வாழ்வு என்னில் ஏதய்யா (2)

யாவர்க்கும் நிறைவாகும் சமாதானம் - அதை
வாழ்வோர்க்குப் பகிர்ந்தளிக்க வரவேணும் (2)
மேகங்கள் மீதமர்ந்து மீண்டும் வரும் - உந்தன்
வருகையின் மகிழ்வூட்டும் விருந்தருளும் (2)


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்