764-உன்னில் நான் ஒன்றாக |
உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக என்னில் வா என் மன்னவா - 3 நினைவாக சொல்லாக செயலாக எனில் வாழும் துணையாளன் நீயல்லவா எனை நாளும் பிரியாமல் உயிரோடு உயிராக இணைகின்ற என் மன்னவா - 2 முதலாகி முடிவாகி முழுதான அன்பாகி மூன்றாகி ஒன்றானவா இனிதாக கனிவாக அருள் வாழ்வின் நிறை காண எனைத் தேர்ந்த என் மன்னவா 2 வளமாகி வாழ்வாகி உயிராக எனையாளும் உயிருள்ள என் மன்னவா பண்பாக பரிவாக எனைக்காக்கும் தாயாக என்னோடு உறவாட வா என் நெஞ்சம் திருக்கோயில் இதில் என்றும் வாழ்கின்ற என் தெய்வம் நீயல்லவா உன்முன்னே எந்நாளும் சுடராக எரிகின்ற அகல் தீபம் நானல்லவா |