Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   763-உன் நினைவில் உன் திருமுன்  
உன் நினைவில் உன் திருமுன் சங்கமிப்பேன்
உன் துணையோடு நாளெல்லாம் பண்ணிசைப்பேன்
என் இயேசுவே என் ஜீவனே
துணையாகி எனையாளும் தேவதேவனே
உன் நினைவில் உன் திருமுன் சங்கமிப்பேன்
உன் துணையோடு நாளெல்லாம் பண்ணிசைப்பேன்

ஸரிகமபா கமபதபா பதபபதப பதநிஸ ஸரிஸ ஸரிஸ ஸரிகரிஸா

அலை போல சோகங்கள் தினந்தோறும் வந்தாலும்
அரண் போல எனைக்காக்கும் என் தெய்வம் நீ ஆ..ஆ..ஆ...
அலை போல சோகங்கள் தினந்தோறும் வந்தாலும்
அரண் போல எனைக்காக்கும் என் தெய்வம் நீ
மலைபோல பாவங்கள் மனதுக்குள் இருந்தாலும்
மறவாமல் மன்னிக்கும் மாமன்னன் நீ
எந்நாளுமே என் இயேசுவே என் வாழ்வெல்லாம் உன் தாயன்பிலே


செல்கின்ற இடமெல்லாம் சொல்கின்ற மொழி கேட்டு
நல்வாழ்வில் உனைக்காணும் வரமொன்று தா - ஆ..ஆ...ஆ
செல்கின்ற இடமெல்லாம் சொல்கின்ற மொழி கேட்டு
நல்வாழ்வில் உனைக்காணும் வரமொன்று தா
தாழ்ந்தோர்க்கும் வீழ்ந்தோர்க்கும் நற்செய்தி நானாகி
நல்லோராய் மாற்றுகின்ற வாழ்வொன்றுதா
உன்வார்த்தையால் உளம் மாற்றவா
உன்பார்வையால் என்னை குணமாக்கவா


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்