Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   762-உன் திருப்பீடம் என்  


உன் திருப்பீடம் என் பூங்காவனம்
வருவேன் நான் அங்கு தினம் தினம்
அறிவேன் உன் தந்தை மனம்
பெறுவேன் உன்னில் மனோபலம்

உன் திருப்பீடம் எனக்கொரு பந்தி
உண்பேன் உந்தன் திருக்கையிலிருந்து
பணிவேன் உன் பாதம் கண்ணீர் சிந்தி
முனைவேன் உன் வேதம் அன்பை எண்ணி - 2

கொடுத்தாய் எனக்கு உன் திரு உடலை
தருவேன் நானும் என் உடல் உயிரை
பணிந்தேன் நான் உன் பாதம் தொட்டு
வாழ்வேன் உனக்காக எல்லாம் விட்டு - 2

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்