Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   761-உன்னதங்களிலிருந்து ஊருக்கெல்லாம்  
உன்னதங்களிலிருந்து ஊருக்கெல்லாம் விருந்து - 2
கன்னி மனம் கலந்து கடவுள் வந்தார் திறந்து
விருந்து விருந்து இது திருவிருந்து
மருந்து மருந்து ஆன்ம மருந்து (2)

மனதுக்கு நல்ல மருந்து
மாண்புக்கு ஏற்ற விருந்து (2)
மாயைகள் போக்க விருந்து
மன நோயினைத் தீர்க்கும் மருந்து
விருந்து விருந்து இது திருவிருந்து
மருந்து மருந்து ஆன்ம மருந்து (2)

உடலினைத் தந்த விருந்து
உரிமையைக் கண்ட விருந்து (2)
உண்மையாய் இந்த விருந்து
உன்னை தினம் தினம் மாற்றும் திருந்து
விருந்து விருந்து இது திருவிருந்து
மருந்து மருந்து ஆன்ம மருந்து (2)


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்