759-உறவு ஒன்று உலகில் தேடி |
உறவு ஒன்று உலகில் தேடி அலைந்து நான் திரிந்தேன் உறவே நீ என்றாய் அன்பு தெய்வமே (2) உறவே வா உயிரே வா எழுந்து வா மகிழ்ந்து வா - 2 உள்ளமென்னும் கோயிலில் உறவென்னும் தீபமே வாழ்வென்னும் சோலையில் வந்திடும் வசந்தமே அன்பனே நண்பனே உன்னை அழைத்தேன் வா ஆன்ம உணவே அருளின் வடிவே அடியேன் இல்லம் வா உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா துன்பமெனும் வேளையில் அன்புடன் அணைக்கவே துணையென வாழ்வினில் என்னுடன் தொடரவே இறைவனே இயேசுவே இதயம் எழுந்தே வா நாதனே நேசனே பாசமாய் நீ வா உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா |