Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   758-உறவின் உயிராக அருளின்  


உறவின் உயிராக அருளின் நிறைவாக
வாழ்வை வழங்கும் நல் இயேசுவே
அருளைப் பொழிந்திடும் ஆற்றல் தந்திடும்
அழியா உணவே எம்மில் வாருமே
உந்தன் வார்த்தை வாழ்வாகுமே என்னில்
உந்தன் பாதை வழியாகுமே (2)
வாரும் தேவா என்னில் வாரும் தேவா
குணமாக்க என்னில் வாரும் தேவா
உமதாக்க என்னில் வாரும் தேவா

சோகங்கள் சுமையாகி தடுமாறும் போது
சிறகாக என்னை நீ மூடினாய்
பாவங்கள் பலகோடி நான் செய்த போதும்
பாசத்தால் என்னை நீ தேடினாய் (2)
இனி வாழும் காலம் இனிதாக மாற
உன்னோடு இணைய ஆசிக்கின்றேன்
நீர் தந்த வாழ்வை உமக்காக வாழ
உம்மோடு வாழ யாசிக்கின்றேன் - 2
வாரும் தேவா என்னில் வாரும் தேவா
குணமாக்க என்னில் வாரும் தேவா
உமதாக்க என்னில் வாரும் தேவா

நட்பென்னும் வானத்தில் இருள் சூழ்ந்த போத
உறவென்னும் கீதமாய் உருவாகினாய்
அன்பென்னும் தீபங்கள் அணைகின்ற நேரம்
ஒளியாக எழுந்து உறவாடினாய் (2)
ஊரெங்கும் சென்று உன் நாமம் சொல்லி
உன் அன்பில் என்றும் நிலையாகுவேன்
முதலாக வாழ்வும் முடிவில்லா வாழ்வும்
உன் நாமம் என்றும் நான் பாடுவேன் - 2
வாரும் தேவா என்னில் வாரும் தேவா
குணமாக்க என்னில் வாரும் தேவா
உமதாக்க என்னில் வாரும் தேவா




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்