Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   757-உறவான உயிரே  


உறவான உயிரே என் இயேசுவே
உயிராக உறவாக எனில் வாருமே (2)
வேளையினைத் தெரிந்து வேண்டுவன செய்வார்
தாயாக மார்போடு அரவணைப்பார்

வழிகாட்டும் தந்தை அவரே
அன்பூட்டும் தாயும் அவரே
உடன் நடக்கும் தலைவர் அவரே
உண்மை பகிரும் தோழன் அவரே
துணையாகவே மனுவானவர்
பணிவாழ்வினில் இரையானவர் (2)

உயிரூட்டும் பலியும் அவரே
வளம் சேர்க்கும் நதியும் அவரே
துயர் துடைக்கும் அருளும் அவரே
பகைமை போக்கும் கருணை அவரே
துணையாகவே மனுவானவர்
பணிவாழ்வினில் இரையானவர் (2)




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்