755-உலகாளும் தந்தாய் நீ |
உலகாளும் தந்தாய் நீ எனைத்தேடி வந்தாயே உமதன்பு பெரிதல்லவா - எந்தன் மனமென்னும் இல்லத்தில் குடியேற குறைநீக்கி வந்தில்லம் மகிழ்வல்லவா பலகோடி செல்வங்கள் எனக்கென்று இருந்தாலும் உமதன்பிற்கீடாகுமா (2) பெற்ற தாயென்னை மறந்தாலும் நீர் என்னை மறவாது உமதன்பை ஈந்தீரையா - என்றும் உமதன்பை ஈந்தீரையா எனக்குள்ளதெல்லாமே நான் வாரித் தந்தாலும் அன்பில்லையேல் பயனில்லை (2) ஏற்ற இறைவாக்கு வரமெல்லாம் கனியெல்லாம் இருந்தாலும் அன்பொன்றே நிறைவானது - இறை அன்பொன்றே நிறைவானது |