Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   754-உறவை வளர்க்கும் விருந்தாக  
உறவை வளர்க்கும் விருந்தாக
பிறந்த வானின் அமுதே வா

செடியைப் பிரிந்த கொடியாக
மடிந்து அழிந்து போகாமல்
இணைந்த கொடியாய்ப் புவியினரை
அணைக்கும் இனிய விருந்தே வா

படர்ந்த இருளோ மறைந்துவிடும்
பருதி முகத்தைக் காண்பதனால்
பாவி வாழ்வு முழுமை பெறும்
தேவன் உமது வருகையினால்

அழியா வாழ்வு விருந்தில் வரும்
பலியால் விருந்தோ தொடர்ந்து வரும்
குருவால் பலியோ தினம் தொடரும்
அருளால் வாழ்வு வளர்ந்து வரும்

புலன்கள் காணா இறையவனை
புவியில் கொணர்ந்த விருந்தே வா
புனித வாழ்வை வளம் செய்யும்
புனித விருந்தே எம்மில் வா


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்