753-உறவினில் வாழும் வசந்தமே |
உறவினில் வாழும் வசந்தமே என் யேசுதேவனே வாழ்வினில் மணக்கும் சுகந்தமே என் யேசுதேவனே உந்தன் நாமம் பாடப்பாட மனம் என்றும் உன்னில் சேர யேசுவே தெய்வமே நீ என்னில் வாருமே கலக்கம் கொண்ட நெஞ்சில் தஞ்சம் மீண்டும் தந்தாயே அஞ்சாமல் நான் வாழ ஆசீர் தந்தாயே என்றென்றும் உன் அன்பில் நிலைக்கச் செய்தாயே அணையாத சுடரே அருள் பாயும் நதியே உறவாடும் நிலவே நீ இதயம் வருவாயே யேசுவே தெய்வமே நீ என்னில் வாருமே உதயம் தேடும் நெஞ்சில் உறவாய் நீயும் வந்தாய் உன்னைப் போல் நான் மாறும் வரமும் தந்தாயே உன்னோடு ஒன்றாக உன்னைத் தந்தாயே அணையாத சுடரே அருள் பாயும் நதியே உறவாடும் நிலவே நீ இதயம் வருவாயே யேசுவே தெய்வமே நீ என்னில் வாருமே |