Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   752-உயிரோவியம் எனை உனதாக்க  
உயிரோவியம் எனை உனதாக்க வா
என் உயிரோடு உயிராக உறவாட வா (2)
உனைத் தேடி என் கண்கள் அலைபாயுதே
உயிர் உனக்காக என் நெஞ்சில் உருவாகுதே
ஒரு புதுராகமே சுகராகமே

அறியாத சிறுபிள்ளை எனையாள வா
என் உயிராக வா உயிர்மூச்சாக வா
பிரியாமல் மறையாமல் என்னோடு வா
என் நிழலாக வா எனை நீங்காமல் வா
உனைக் காணும் நேரம் போதும்
கரைந்தோடும் சோகம் யாவும்
உயிரே உறவே நீ வா வா

நிதந்தோறும் நிறைவேறும் நிஜமாக வா
என் நினைவோடு வா என் கனவோடு வா
எனக்காகப் பல ஜென்மம் உயிர்வாழ வா
என் உருவாக வா எனை உருவாக்க வா
நேசங்கள் என்னில் நீயே பாசங்கள் தருவாயே
உயிரே உறவே நீ வா வா


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்