750-உயிரே என்றாக உணவில் |
உயிரே என்றாக உணவில் ஒன்றாகி இணைந்தார் நம்மில் எழுந்தார் (2) திருவிருந்திலே பெரும் நிறைவிலே - 2 நாளும் மகிழ்ந்து வாழ்வோம் உறவோ பிரிவோ நிறைவோ குறைவோ எமக்குப் பயமில்லையே (2) எங்கள் இதயத்திலே அன்பர் இயேசுவையே - 2 என்றும் தாங்கி வாழ்ந்து செல்வோம் உயர்வோ தாழ்வோ வாழ்வோ வீழ்வோ எமக்குப் பயமில்லையே (2) எங்கள் இதயத்திலே அன்பர் இயேசுவையே - 2 என்றும் தாங்கி வாழ்ந்து செல்வோம் இரவோ பகலோ விடிவோ முடிவோ எமக்குப் பயமில்லையே (2) எங்கள் இதயத்திலே அன்பர் இயேசுவையே - 2 என்றும் தாங்கி வாழ்ந்து செல்வோம் |