749-உயிரே எந்தன் உயிரே |
உயிரே எந்தன் உயிரே என்னில் ஒன்றாய்க் கலந்துவிடு உன்னால் வாழும் உயிரை இனிதாய் இன்று ஆக்கிவிடு உணவாய் என்னில் நீ வரும் வேளை உலகே இனிதாய் மாறிடும் நாளை பாலைவனப் பயிராய் வாடி நின்ற வேளை பாய்ந்து வரும் வெள்ளமாய் நீயாகினாய் காய்ந்து போன நிலையில் நான் நின்ற வேளை கனிகொடுக்கும் மரமாக நீ மாற்றினாய் உயிரே உயிரே என்னில் இன்று கலந்திட வா உறவே உறவே என்னில் இன்று மகிழ்ந்திட வா என் வாடிய நெஞ்சம் உந்தன் வரவால் இனிதாய் பூ பூக்கும் (2) தேய்ந்து போன நிலையில் நான் நின்ற வேளை தோள் கொடுக்கும் தோழனாய் நீ மாறினாய் சோர்ந்து போன நிலையில் நான் நின்ற வேளை தாங்கி வரும் கரமாக நீயாகிறாய் உயிரே உயிரே என்னில் இன்று கலந்திட வா உறவே உறவே என்னில் இன்று மகிழ்ந்திட வா என் வாடிய... |