Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   743-  


உயிரின் உயிரே வா
உன்னத ஒளியே வா
அருளின் நிறைவே வா
அன்பே எம்மில் எழுந்து வா

வாழ்விக்கும் தெய்வம் நீயானாய்
வாழ்வோம் உந்தன் தயவினால் - 2
முத்துக்கள் நீ தந்தாய்
முத்தங்கள் நான் தந்தேன்
முதல்வா தலைவா விரைந்து வா

அன்பெனும் உறவு மீட்டினாய்
ஆனந்த ராகம் மீட்டினேன் - 2
பாவங்கள் நீ வென்றாய்
பாவியாய் நான் நின்றேன்
மாபரனே என்னைத் தேற்றிட வா




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்