Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   747-உயிரின் உணவே இயேசுவே  
உயிரின் உணவே இயேசுவே
உறவில் இணைய வாருமே
பலியின் நிறைவே இயேசுவே
பணியில் துணையைத் தாருமே
வாழவின் பொருளே வா வாசல்; திறந்தேன் வா
உண்மை வழியே வா உயிரில் கலந்திட வா
என்னில் நீ இணைந்தால் உன்னருள் பொழிந்தால்
பிணிகள் சுகமாகும் வாழ்வு விருந்தாகும்

உள்ளில் உறைந்து உலகை இயக்கும்
உந்தன் அதிசயம் காண்கிறேன் (2)
என்னைத் திறந்து இதயம் அமர்ந்து
ஆக்கும் அருள்தர கேட்கிறேன் (2)
திருவிருந்தில் தினம் அமர்ந்தேன்
உன்னில் நான் கலந்தேன் (என்னில் நீ...)

சிந்தை நுழைந்து செயல்கள் கொணரும்
விந்தை உன்னிடம் காண்கிறேன் (2)
உன்னில் கரைந்து என்னை இழந்து
உழைக்க உறுதி பெறுகிறேன் (2)
வரும் தடைகள் உடைத்திடுவேன்
புது உலகம் படைத்திடுவேன் (என்னில் நீ...)




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்