Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   746-உயிர் தரும் உணவே  


உயிர் தரும் உணவே இறைவா
உயிருக்குள் உயிராய் வா வா
அருள் தரும் ஊற்றே இறைவா - நல்
ஆற்றலாய் என்னுள்ளம் வா வா

வா வா இறைவா வாழ்வின் - உறவாய்
என்னுயிர் இயேசுவே வா வா

உயிர் உள்ள விருந்தே என் இறைவா
நலம் தரும் மருந்தாய் எனில் வா வா
நிரந்தர வாழ்வே என் தேவா
நிம்மதி வாழ்வாய் எனில் வா வா

அழியாத உணவே என் இறைவா
ஆன்ம ஒளியாய் எனில் வா வா
அன்பின் பகிர்வே என் தேவா
அனுதின உணவாய் எனில் வா வா



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்