745-உள்ளத்தின் உயிராய் எழுவாய் |
உள்ளத்தின் உயிராய் எழுவாய் உயிருக்கு உணவாய் வருவாய் குரு இவர் கரம் வழி அருள்வாய் இறைவா வருவாய் நித்திய குரு நீர் செலுத்திய பலியை குரு இவர் தலைமையில் அளித்ததை ஏற்று இறைவா வருவாய் வானுறை இறைவன் பாவியர் எம்மை சீருடன் பொறுத்த அன்பின் சின்னமாய் இறைவா வருவாய் உலகத்தின் ஒளியாய்ப் பலருக்கும் துணையாய் நிலவிட அருள்வாய் திருக்குலத்தவர் யாம் இறைவா வருவாய் அழிவிற்கு மரித்து அருளிலே உயிர்க்கும் எழில் மிகு கிறிஸ்தவ வாழ்விலே மலர இறைவா வருவாய் பாசத்தின் பிணைப்பால் பாரிலுள்ளோர்க்குப் பரமன்னை சபையின் சான்றாய் விளங்க இறைவா வருவாய் |