Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   744-உள்ளம் என்னும் கோவிலிலே  
உள்ளம் என்னும் கோவிலிலே
வாராயோ இறைவா
இன்பம் எங்கள் வாழ்வினிலே
தாராயோ தலைவா - 2

நீயே என் தேடல் நீயே என் பாடல்
நீயே என் ராகம் தாளம் சங்கீதமாய் - 2
மழையாக நதியாக இசையாக வா
உணவாக உறவாக உயிராக வா

என் வாழ்வு உனைத் தேடும் பயணமன்றோ
உன் அன்பே எனை மேவும் தருணமன்றோ - 2
தாயன்பில் தலைசாய்க்கும் சேயாகினேன் - 2
நானுந்தன் பேரன்பில் கல்லாகினேன்

ஆனந்தம் ஆனந்தம் - என்
விழியிலும் மொழியிலும் ஆனந்தம்
பேரின்பம் பேரின்பம் - என் - 2
கனவிலும் நனவிலும் பேரின்பம்

உன் வாக்கு என் வாழ்வின் விளக்கல்லவா
என்போர்க்கு கனிவான மொழியல்லவா - 2
உள்ளார்ந்த நலம் வேண்டி மன்றாடினேன் - 2
உன் வார்த்தை கார்மேகப் பயிராகினேன்

ஆனந்தம் ஆனந்தம் - என்
விழியிலும் மொழியிலும் ஆனந்தம்
பேரின்பம் பேரின்பம் - என் - 2
கனவிலும் நனவிலும் பேரின்பம்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்