743-உணவான இயேசுவே |
உணவான இயேசுவே உயிரான தெய்வமே உறவாக வாழ்ந்திட அருள் தாருமே (2) அன்பான இயேசுவே அருமையான தெய்வமே - 2 உம்மோடு வாழ்ந்திட (துணை தாருமே - 2) உணவைத் தேடி அலைந்தோம் - எங்கள் ஆன்ம பசி தீர்ந்திடச் செய்தாய் உறவைத் தேடி அலைந்தோம் - எம்மில் உயிரைத் தந்து காத்தாய் (2) இனி வாழ்வது நானல்ல - என்னில் வாழ்வது உம் உயிர்தானே உணவே உயிரே வா - என் உணவே உயிரே வா அமைதி தேடி அலைந்தோம் - எம்மில் அமைதி தந்து காத்தீர் இறைவா அருளைத் தேடி அலைந்தோம் - உந்தன் அருளைத் தந்து நிறைத்தாய் (2) இனி வாழ்வது நானல்ல... |