741-உங்களுக்காகக் கையளிக்கும் |
உங்களுக்காகக் கையளிக்கும்
இயேசுவின் உடலிது (2) - இதை வாங்கி உண்ணுங்கள் புது வாழ்வு காணுங்கள் இயேசுவின் உடலாக மாறுங்கள் பருகி மகிழும் கிண்ணம் ஒன்று - இனி பகைமை உணர்வு தன்னில் எதற்கு விருந்தில் வழங்கும் அப்பம் ஒன்று -2 இனி உயர்வு தாழ்வு நம்மில் எதற்கு ஒருகொடி கிளையென நாம் இpனி இணைந்து சமத்துவ பயணம் பாரினில் தொடர்ந்து அன்பின் கனிகள் தருவோம் புதிய உலகம் ஒன்று மலர - இறை அரசின் கனவு எங்கும் விடிய பழைய மனிதன் தன்னைக் களைய -2 இங்கு புதிய இயல்பை அன்பில் அணிய தனதுடல் உடைத்தவர் அன்னமாய் வந்தார் ஒருமைப்பாட்டின் சின்னமாய் வந்தார் அவரின் உடலை உண்போம் உரிமை அடிமை என்ற பேதம் - இந்த உணவை உணர்ந்து உண்ண மாறும் ஏழ்மை வறுமை என்னும் காயம் -2 பெற்ற வாழ்வைப் பகிர இங்கு ஆறும் தன்னுயிர் தியாகம் ஏற்றிட அழைக்கும் விண்ணக விருந்தில் கலந்திட எழுவோம் கொடுத்த நிறைவைக் காண்போம் |