Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   739-இனிய தெய்வம் இயேசுவே  
இனிய தெய்வம் இயேசுவே
எங்கள் வாழ்வின் நாயகா
ஏங்கும் ஏழை நெஞ்சங்கள்
ஏற்றம் காண எழுந்து வா (2)

மார்த்தாள் மரியாள் இல்லம் சென்று
மகிழ்வை விதைத்த தெய்வமே
இறந்த லாசர் உயிர்த்து எழுந்தார்
உந்தன் வல்லமை செயலிலே (2)
மண்ணில் மாந்தர் உதயம் காண
மடிந்த இதயம் உறவில் உயிர்க்க
கருணைக் கடலே கனிந்த அன்பே
அணையா விளக்கே அருகில் வா

வானம் பார்த்த பூமியாக
வளமை இழந்து தவிக்கின்றோம்
வந்து தங்கும் எம்மில் இறைவா
வசந்தம் பெறுவோம் வாழ்விலே (2)
நீயில்லாத வாழ்க்கை எல்லாம்
நிலவில்லாத வானம் தானே
மனிதம் மலர மாண்பு உயர
தேவ தேவா எம்மில் வா




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்