Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   738-இனிய அன்பு தேவனே  


இனிய அன்பு தேவனே - என்
இதயம் எழுந்து வாருமே
இனி எந்தன் வாழ்வு உமதே
இனி எந்தன் வாழ்வு உமதே

துன்பங்கள் ஆயிரம் அலைகளாய்
என்னிடம் வருகின்றன - அதில்
துவண்டு நான் போயினும்
உந்தன் திருமுகம் காண்கிறேன்
என்றும் நீயிருக்க எனக்கேன் குறையோ
உயர் இறைவன் அன்பு என்றும் போதுமே
துயர் யாவும் என்றும் தீருமே

தீபம் போல என் வாழ்வு உன்முன்
என்றும் எரியட்டும் - அதன்
ஒளிபோல் நானும் என்றும்
உன்னால் ஒளிரணும் -என்றும்
நீயிருக்க குறையில்லையே - உயர்
இறைவன் அன்பு என்றும் போதுமே
உள்ளம் உள்ளவரை என்றும் வாழுமே


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்