Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   737-இனிதே அழைத்தேன் இறைவா  
இனிதே அழைத்தேன் இறைவா - உம்
கனிந்த அருளை மிகுந்தே பொழிய
இனிதே அழைத்தேன் இறைவா

அழைத்த குருடன் குரல் கேட்டாய் - அவன்
காணக் கண் பார்வைதனைத் தந்தாய்
காணாத எனது அகக்கண் திறக்கக்
கூடும் உம்மால் தலைவா வருக தலைவா வருக

பசித்த மாந்தர் குறைபோக்க - இன்று
புசித்திட உணவும் நீ தந்தாய்
புசித்தேன் உமக்காய் பசியைப் போக்கக்
கூடும் உம்மால் தலைவா வருக தலைவா வருக

பாலையென வரண்ட என்னுள்ளம் - அதைச்
சோலையாய் மாற்ற உமை அழைத்தேன்
இருண்ட என் வாழ்வில் ஒளியை ஏற்ற
கூடும் உம்மால் ஒளியே வருக ஒளியே வருக



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்