Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   736-இன்றும் என்றும் திருநாளாம்  
இன்றும் என்றும் திருநாளாம் - நம்
இயேசுவின் பாதத்திலே
அடியவர்க்கெல்லாம் பெருவிருந்தாம் - அவர்
ஆலயப் பீடத்திலே - 2 - அவர்...

மன்னவன் தந்த விருந்தாகும் - அவர்
மகனுக்குத் திருமணமாம்
மாநிலமெல்லாம் அழைக்கின்றார் - அது
மாறாத பேரின்பமாம் (2)
மாறாத பேரின்பமாம் அது மாறாத பேரின்பமாம்
மாநிலமெல்லாம் அழைக்கின்றார் - அது
மாறாத பேரின்பமாம்

கொடியில் கிளைகள் சேர்ந்திருந்தால் - அவை
கோடியாய் பலன் தருமாம்
இயேசுவில் நானும் இணைந்திருந்தால் - என்றும்
இல்லாத பேரின்பமாம் (2)
இல்லாத பேரின்பமாம் என்றும் இல்லாத பேரின்பமாம்
இயேசுவில் நானும் இணைந்திருந்தால் - என்றும்
இல்லாத பேரின்பமாம்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்