735-இன்பம் தேடும் இதயமே |
இன்பம் தேடும் இதயமே இயேசுவிடம் போ (2) பேரின்பம் தரும் வாழ்வின் ஊற்று (அவரே அவரே - 2) இனிது இனிது அவரருளும் திருவிருந்து புனிதரெல்லாம் சுகங்கண்ட அருமருந்து (2) கனிந்து விடும் கல்மனமும் அவர் தொடும்போது தணிந்து விடும் நம் துயரம் அவர் வரும்போது (2) எளிய மனதில் ஏற்றம் தரும் திருவிருந்து இன்னல்களைத் தடுத்தாளும் உடனிருந்து (2) வலிமையுடன் வாழச் செய்யும் பேராற்றலிது வறண்டுவிடா வளமருளும் அனுதினம் சுரந்து (2) |