Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   733-இறைவா வா விரைவாய் வா  
இறைவா வா விரைவாய் வா
என் உள்ளத்தின் தெய்வமே வா

எந்தன் சிந்தனை உமக்கன்றோ
சிந்தை சிறக்க எழுந்து வா - 3

எந்தையும் தாயும் நீயன்றோ
எந்தன் இதயம் மகிழ வா - 3

ஒளிரும் உயிரும் நீயன்றோ
வழியில் இருளை நீக்க வா - 3

பாவத்தில் புரண்டு மயங்கினேன்
தாபத்தில் உன்னடி பணிகின்றேன் - 3

கண்ணில் குளிர்ச்சி கடல் சென்றால்
என்னில் மகிழ்ச்சி நீயும் வந்தால் - 3



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்