Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   732-இறைவா நீ வா  


இறைவா நீ வா என் இதயத்தில் வா
உயிரே நீ வா என் உயிருக்கு உணவாக வா - 2
என்னோடு நீ கொள்ளும் உறவானது
என்றென்றும் எனை விட்டுப் பிரியாதது

பசியோடு போராடும் ஏழையர் வாழ்வினையே
நீ குடியிருக்கும் கோயிலாகக் கண்டு கொண்டேன் - 2
மடிகின்ற இதயங்கள் மலர்ந்திடவே - உன்
வார்த்தை வலிமையைக் கண்டுகொண்டேன்
எனை கண்டுகொண்டேன் உனைப் பின்தொடர்ந்தேன்
இதுதான் என் பணியென்று புரிந்து கொண்டேன்

அநீதியில் ஆளுகின்ற அதிகாரக் கூட்டத்தையே - நீ
அழித்தொழிக்கும் சக்தியாகக் கண்டுகொண்டேன் - 2
உண்மையும் நீதியும் அமைதியுமே - உன்
உள்ளத்தின் கனவென்று கண்டு கொண்டேன்
தர்மம் வெல்லக் கண்டேன் அதர்மம் அழியக் கண்டேன்
இதுதான் என் பணியென்று புரிந்து கொண்டேன்





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்