731-இறைவா பேசும் |
இறைவா பேசும் இதயத்தை திறந்தேன் இனியொரு பொழுதும் உனை மறவேன் தலைவா வாரும் தனிமையை போக்கும் கலையிழந்த என்னில் பொலிவழகூட்டும் இறைவா பேசும் உன்னடி நிழலில் உன் மொழி கேட்க உவப்புடன் ஒதுங்கியுள்ளேன் புலன்களை அடக்கி உள்ளத்தின் கதவினை உனக்காய் திறந்துள்ளேன் ஒரு வார்த்தை கூறுமையா என் உள்ளம் மகிழுமையா இருண்ட உள்ளம் உன் அருள் மொழியில் வெளிச்சம் காணுமையா உன் மொழி கேட்பதில் உளம் பெறும் அமைதி வேறெங்கும் இல்லையையா உன் திரு வார்த்தை வழங்கிடும் வாழ்வு எதிலும் இல்லையையா என் உள்ளத்தின் மௌன நிலை அது உரைக்கும் சோகக் கதை உன் திரு வார்த்தை ஏற்பதினாலே மகிழ்வாய் மலருமையா |