731-இறைவா என்னுள்ளம் |
இறைவா என்னுள்ளம் மகிழ்ந்திட கனிந்திட இன்றே எழுந்து என்னில் வா (2) நான் காலமும் காத்திருந்து பூவாய்ப் பூத்திருந்து உன்னை எதிர்பார்த்திருந்தேன் இறைவா.... என்னில் மகிழ்ந்தே இன்று வா நேசம் என்னில் தந்திடுவாய் - உன் பாசம் என்னில் பொழிந்திடுவாய் (2) உணவாக என்னில் வந்து உறவாக உன்னைத் தந்து உயிரோடு கலந்திட வா (2) விண்ணிலே ஒரு சொந்தம் அழைத்திட மண்ணிலே புது வாழ்வு மலர்ந்திட நிறைவாக என்னில் எழுவாய் - நான் உனில் வாழ எந்நாளும் அருள்புரிவாய் சொந்தம் நீயென வந்திடுவாய் வசந்தங்கள் வாழ்வில் தந்திடுவாய் (2) நினைவாக என்னில் வந்து நிலையாக உன்னைத் தந்து நிழலாக என்னைத் தொடர்வாய் (2) விண்ணிலே ஒரு சொந்தம் அழைத்திட மண்ணிலே புது வாழ்வு மலர்ந்திட (நிறைவாக...) |