Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   729-இறைவா என்னில்  


இறைவா என்னில் தங்கிட வா
நிறைவாய் அருளைப் பொழிந்திட வா
ஒரு வார்த்தை சொல்லி என்னை
தகுதியாய் மாற்றிட வா...
இயேசுவே வாராய் - 2 எழுந்து வாராய் - 2
உறவாட உயிரோடு கலந்திட வாராய்

என் பாதம் நோகாமல் என் பயணம் இனிதாக
என்னோடு என்றும் நீ வாழ்ந்திட வா (2)
எந்நாளும் என்னோடு தங்கிட வா
என் வாழ்வின் வழியாக முன்போக வா
உனில் வாழ என் வாழ்வில் அருள் தந்திடு
இயேசுவே வாராய் - 2 எழுந்து வாராய் - 2
உறவோடு உயிரோடு கலந்திட வா.....

உன் அருகில் எனைச் சேர்த்து உறவோடு அணைத்திட
உணர்வோடு என்னில் மகிழ்ந்திட வா (2)
பாவங்கள் புரிந்தே நான் வாழ்கின்றேன்
பரிவோடு எனை மீட்க வந்திடுவாய்
பண்போடு நான் வாழ வரம் தந்திடு
இயேசுவே வாராய் - 2 எழுந்து வாராய் - 2
உறவோடு உயிரோடு கலந்திட வா.....




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்