728-இறைவா எழுந்தருள்வாய் |
இறைவா எழுந்தருள்வாய் - எந்தன் இதயத்தில் வந்தருள்வாய் கறைகளைக் கழுவிடுவாய் - உந்தன் இதயம் போல் மாற்றிடுவாய் உலகினைப் படைத்து உயிரினைக் காத்கும் - இறைவா. அலகையை அழித்து அமைதியைத் தந்த - இறைவா. எந்தனின் உள்ளம் அமைதியைக் கண்டிட - இறைவா. உந்தனின் அமைதியை உலகம் கொண்டிட - இறைவா. நொறுங்கிய உள்ளம் மலர்ந்திட கனிந்திட - இறைவா. குறுகிய மனமும் பரந்திட விரிந்திட - இறைவா. பொய்மையும் பகைமையும் ஒழிந்திட மறைந்திட - இறைவா. வாய்மையும் அன்பும் வளர்ந்திட வாழ்ந்திட - இறைவா. பாஸ்கா உணவை உண்டிட வந்தேன் - இறைவா. பலியுணர்வோடு பலிப்பொருளானேன் - இறைவா. இறைகுலத்தோடு இணைந்தே வந்தேன் - இறைவா. மறையுண்மைக்காக சாட்சியாய் வாழ்வேன் - இறைவா. |