Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   725-இறைவன் தரும் இந்த உணவு  
இறைவன் தரும் இந்த உணவு
இதயம் நிறைந்திடும் உணர்வு
இறைவன் தரும் இந்த விருந்து
இதுவே அகமருந்து
என் வாழ்வும் - என் இயேசுதான்
என் வழியும் - என் இயேசுதான்
என் உயிரும் - என் இயேசுதான் - என்றும்

தனிமையில் இருந்தால்கூட - உன்
உணவே உறவாகும் - நான்
துயரினில் விழுந்தால் கூட - உன்
கரமே துணையாகும்
இருளில் நானும் நடந்தாலும்
ஓளிப்பிழம்பாய் அருகே இருக்கின்றாய்
சுமைகளுமே சுகமாகும் உந்தன் வரமே வரமாகும்
எனைத்தேடி வந்தாயே - நலம் யாவும் தந்தாயே
நல்வரமாய் வந்தாயே - புதுவாழ்வைத்; தந்;தாயே

உன்னில் கலந்திடும்போது - நான்
என்நிலை அறிந்து கொண்டேன்
உன்னை ஏற்றிடும்போது - நான்
பிறரை அன்பு செய்வேன்
உலகே என்னை எதிர்த்தாலும்
நீ இருப்பதால் எனக்கு பயம் இல்லை
பேச்சினிலும் மூச்சினிலும் உந்தன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
என் தேடல் நீதானே என் ஆவல் நீதானே
என் பாதை நீதானே என் பயணம் நீதானே



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்